Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு வேளையில் கம்பளையில் ஆர்ப்பாட்டம்!

கம்பளை, தோலுவ  பில்லகொல்ல சந்தியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பில்லகொல்ல, கணேகோட, கலுகமுவ உள்ளிட்ட  கிராமங்களில் வசிப்பவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக அறிய வருகிறது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களுக்கு எந்த நிவாரணப் பொருட்களும் கிடைக்கவில்லை என்று பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும் இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய போராட்டம் பகல் 12 மணி வரை தொடர்ந்து  இடம்பெற்றுள்ளது.

பேராதனை பொலிசார் உரிய  நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

Post a Comment

0 Comments