Ticker

6/recent/ticker-posts

ஊடகங்களில் மட்டுமே தேர்தல் பிரசாரம்! சுகாதார அமைச்சு பரிந்துரை!



எதிர்வரும் பொதுத்தேர்தலில்  பிரச்சாரங்களை ஊடகங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இன்று (20) நடைபெறவிருக்கும் கூட்டத்தில் இன்று பற்றி விவாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் பிரசாரத்திற்காக  மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

தேர்தல் பிரசார கூட்டங்கள் மற்றும் வீடு வீடாக சென்று செய்யும் பிரசாரங்கள் போன்றவற்றையும் தடைசெய்ய சுகாதார அமைச்சு  பரிந்துரை செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவது குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் இன்று (20) காலை விசேட கூட்டம்  நடாத்தவுள்ளது.

சுகாதார, தபால், பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொது நிர்வாகத்துறை அதிகாரிகள் இந்த  கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை  அரசியல் கட்சி செயலாளர்களுடன் கலந்துரையாடவும்   தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments