Ticker

6/recent/ticker-posts

அடையாள அட்டை இலக்க சட்டம் ஊரடங்கு இல்லாத பகுதிகளுக்கு மட்டுமே!



அரசாங்கம் அறிமுகப்படுத்திய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி வீட்டை விட்டு வெளியே செல்லும் அனுமதி தொடர்பாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் எஸ்.பி. ஜாலிய சேனரத்ன மூலம்
மீண்டும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஊரடங்கு  சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியேறும் நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதே இந்த சட்டத்தின் குறிக்கோள் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த புதிய நடைமுறையின் கீழ், அனைத்து மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே ஒரே நாளில் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments