Ticker

6/recent/ticker-posts

பயங்கரவாதி ஸஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி வழங்கியவர் கைது!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியான பயங்கரவாதி ஷஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நேற்றுமுன்தினம் (06) பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணைக்காக கொழும்பு 4ம் மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கடந்த 2018ம் ஆண்டு வெடி விபத்தொன்றில் பயங்கரவாதி ஷஹ்ரானின் சகோதரனான பயங்கரவாதி மொஹமட் றில்வான் காயமடைந்து வைத்தியசாலைக்குச் செல்லாமல் மறைந்து ஒல்லிக்குளம் முகாமில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.
அப்போது, அவருக்கு மருத்துவ உதவிகள் செய்த குற்றச்சாட்டில் அரசாங்க ஸ்தாபனம் ஒன்றில் கடமையாற்றிவரும் காத்தான்குடியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.NewUthayan

Post a Comment

0 Comments