Ticker

6/recent/ticker-posts

படகு மூலம் இந்தியா சென்ற ஒருவர் சிக்கினார்: இருவர் தப்பியோட்டம்

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா சென்ற மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இருவர் தப்பிச் சென்றுள்ளனர். 

ராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நள்ளிரவில் இலங்கையில் இருந்து வந்த ஒரு படகில் 3 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் இறங்கியுள்ளனர். இதில் ஒருவர் மட்டும்
பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் மற்றைய இருவரும் தப்பி ஓடிள்ளனர். 

பிடிபட்டவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது31) என்பது விசாரணையில் தெரியவந்தது. 

இந்நிலையில் மணிகண்டன் பொலிஸ் நிலையத்தில் கூறியபோது, 

´கடந்த 1990–ல் சிறுவயதில் பெற்றோருடன் அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்தேன். பின்னர் 2012–ல் விமானம் மூலம் இலங்கை கிளிநொச்சிக்கு திரும்பினேன். அங்கு எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. 

அய்யப்ப பக்தனான நான், சபரிமலை செல்ல 40 நாட்களுக்கு முன்பு கிளிநொச்சியில் மாலை அணிந்து விரதம் இருந்தேன். இலங்கை தலைமன்னாரில் இருந்து படகுக்கு வாடகையாக ரூ.50ஆயிரம் கொடுத்து தனுஷ்கோடி வந்தேன்´ என்று தெரிவித்துள்ளார். 

பிடிபட்ட மணிகண்டனை தனுஷ்கோடி பொலிஸார் கடவுச்சீட்டு சட்டத்தில் கைது செய்து விளக்கமறியலில் வைத்தனர். தப்பிச் சென்ற இவரையும் பொலிஸார் தேடி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments