Ticker

6/recent/ticker-posts

எபோலா மற்றும் எச்.ஐ.வி-யை எதிர்த்துப் போராடிய விஞ்ஞானியை பதம் பார்த்த கொரோனா !


லண்டன் ஸ்கூல் ஒஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் இயக்குனரும் வைரஸ் தொடர்பான ஆய்வாளருமான  பீட்டர் பியோட் மார்ச் நடுப்பகுதியில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து வருகிறார்.

பீட்டர் பியோட் ஒரு வாரம்  மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்., தற்போது  லண்டனில் உள்ள தனது வீட்டில் குணமடைந்து வருகிறார். இப்போது கூட மாடிப்படிகளில் ஏறுவது கஷ்டமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

பெல்ஜியத்தில் வளர்ந்த பீட்டர் பியோட், 1976 இல் எபோலா வைரஸைக் கண்டுபிடித்தவர்களில் முக்கிய நபராக கருதப்படுகிறார், மேலும் இவர் வைரஸ் தொற்று நோய்களுக்கு எதிரான ஆராய்ச்சிகளிலும், கண்டு பிடிப்புகளிலும் தனது வாழ்க்கையை கழித்துள்ளார்.

1995 மற்றும் 2008 க்கு இடையில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டத்தின் தலைவராக இருந்த அவர் தற்போது ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் Ursula von der Leyen கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசகராகவும் உள்ளார்.

ஆனால்  கொரோனா வைரஸ் அவரையும் பதம் பார்த்துள்ளது.  புதிய கொரோனா (கொவிட் 19) வைரஸுடனான அவரது தனிப்பட்ட மோதலானது வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது என்று பியோட் கூறுகிறார்.

Post a Comment

0 Comments