Ticker

6/recent/ticker-posts

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பியவர் கைது!


கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி வதந்தி பரப்பியதாக தணிகாசலம் என்பவரை தமிழ்நாடு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொரோனாவை குணமாக்க இதுவரை அதிகாரப்பூர்வமாக மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் அதற்கான ஆய்வை தீவிரமாக தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து தன்னிடம் உள்ளதாகவும், கொரோனாவை தன் உடம்பில் செலுத்தினால் தன்னுடைய மருந்தினால் மீண்டு வந்து நிரூபிக்கிறேன் எனவும் இணையத்தில் வீடியோக்கள் மூலம் பரபரப்பை கிளப்பியுள்ளார் தணிகாசலம். 
இவர் தன்னை சித்த மருத்துவர் எனக் கூறிக்கொள்ளும்  தணிகாசலம் மீது தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரை அடுத்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி வதந்தி பரப்பியதாக தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு பொலிசார் தணிகாசலத்தை கைது செய்துள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments