ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில் அதிபர் ஆண்ட்ரேஜ் டூடா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிபரின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில் புதிய அதிபரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் ஆளும் law and justice கட்சி சார்பில் அதிபர் ஆண்ட்ரேஜ் டூடாவே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்கட்சியான civic platform கட்சி சார்பில் பெண் வேட்பாளாரான மல்கோர்சாட்டா கிடாவா பிளான்ஸ்கா களமிறக்கப்படுள்ளார். இதனை தொடர்ந்து தேர்தல் பணிகள் சூடுபிடித்திருந்த நிலையில் உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று போலந்தையும் ஆக்கிரமித்துள்ளது.
அங்கு இதுவரை 14,470 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 744 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அங்கு பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கொரோனா பரவல் காரணமாக அங்கு அதிபர் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துவந்து. இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிபர் தேர்தலை ஒத்திவைப்பதாக அதிபர் ஆண்ட்ரேஜ் டூடா அறிவித்துள்ளார்.
நேற்று கூட்டணிக்கட்சிகளுடனான ஆலோசணைக்கு பிறகு அதிபர் இந்த முடிவை அறிவித்துள்ளார். இதனை அடுத்து தேர்தலுக்கான மறு தேதி விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் அந்நாட்டில் எழத்தொடங்கியுள்ளன. news7.tv /tamil

0 Comments