பெய்ஜிங் நகரின் அதிகாரி லி ஜுன்ஜி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் வடமேற்கு ஹைடியன் மாவட்டத்தில் புதிய கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடல் உணவுச் சந்தையையும் அதன் அருகிலுள்ள 10 நகரங்களும் மூடப்படும் என்றும் அந்த அதிகாரி அறிவித்துள்ளார்.
சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பல லட்சம் உயிர்களை காவு கொண்டு வரும் நிலையில் சீனாவில் அதன் தாக்கம் குறைந்து வந்திருந்தது. என்றாலும் கடந்த சில தினங்களாக பெய்ஜிங் நகரில் உள்ள ஓர் உணவுச் சந்தையிலிருந்து மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.

0 Comments