Ticker

6/recent/ticker-posts

தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுமாம் சவுதி அரேபியா!


பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது இராச்சியத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்  பிரான்ஸ், புர்கினா பாசோ, மாலி, மவுரித்தேனியா, நைஜர் மற்றும் சாட் உள்ளிட்ட ஜி 5 சஹேல் நாடுகளினது  கூட்டத்தின் போது அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளில் சவுதி அரேபியா முன்னணியில் உள்ளது என்றும், அப்பாவி மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கக்கூடியதும் மற்றும் நாடுகளின் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்கக்கூடியதுமான  ஒரு விரிவான அணுகுமுறையை கடைப்பிடிப்பதன் மூலம் குறித்த இலக்கை அடைவதற்கு  சவுதி அரசு  முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஐ.நா பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை நிறுவுவதற்கு சவுதி அரசு  110 மில்லியன் டாலர்கள் பங்களித்துள்ளதாகவும், இது சஹேல் உட்பட ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு முக்கியமான ஆதரவை வழங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 

பயங்கரவாதத்தை  எதிர்ப்பதில் சவுதி அரேபியா குறித்த நாடுகளுக்கு ஆதரவையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க ஆர்வமாக உள்ளது என்றும் இளவரசர் பைசல் கூறியுள்ளார்.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து நாடுகளையும் ஆதரிப்பதில் சவுதி அரசு  எந்த முயற்சியையும் கைவிடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் சவுதியின் ஆபிரிக்க விவகாரத்துறை அமைச்சர் அகமது பின் அப்துல் அஜீஸ் கட்டான் மற்றும் பலதரப்பு சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் அப்துல்ரஹ்மான் பின் இப்ராஹிம் அல்-ராசி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments