Ticker

6/recent/ticker-posts

பொலிஸ் சான்று பத்திரம் மற்றும் புகார்களின் நகல்களை 24 மணி நேரமும் பெறலாம்


பொலிஸ் சான்று பத்திரம் மற்றும் புகார்களின் நகல்களை 24 மணி நேரமும் வழங்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர்   சி.டி.விகரமரத்ன பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக பதில் பொலிஸ் மாஅதிபர்   சி.டி.விகரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பொலிஸ் காவல்துறை என்பது  24 மணிநேரமும் இயங்கும் ஒரு சேவையாகும், இந்தத் திட்டம் பொதுமக்களின் சிரமங்களைத் தவிர்த்து  தரமான சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் தொிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்ட நேரத்திலிருந்து பொறுப்பான அதிகாரி பொதுமக்களுக்கு பிரதிகளை வழங்க வேண்டும் என்றும், அதற்கான தொகைக்கு கட்டாயமாக  பற்றுச்சீட்டு  வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த  சுற்றறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments