Ticker

6/recent/ticker-posts

நாட்டின் தற்போதைய அரசியல் நிலை படுமோசமானது: சந்திரிக்கா


நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை வாயால் சொல்ல முடியாதளவுக்கு படுமோசமாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

முன்னாள் நிதியமைச்சரான மங்கள சமரவீர தேர்தல் அரசியலில் இருந்து விலக எடுத்த தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது, "நாட்டின் அரசியல் நிலைமை வாயால் சொல்ல முடியாதளவுக்கு படுமோசமாகவுள்ளது. இந்த நிலையில், பாராளுமன்ற அரசியலில் இருந்து மங்கள சமரவீர விலகியதை நான் வரவேற்கிறேன். அவர் அவ்வாறு விலகுவது உண்மையில் எனக்கு விருப்பமான முடிவு அல்ல. ஆனால், அவரின் முடிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன்." என்றுள்ளார்.

Post a Comment

0 Comments