Ticker

6/recent/ticker-posts

முகக் கவசம் அணியாதவர்களைத் தேடும் வேட்டை நாளை ஆரம்பம்!


இலங்கையில் கொரோனா தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றாதவர்கள், முகக்கவசங்களை அணியாதவர்களை  சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் இன்று (28) முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

 
கொரோனா வைரஸ் தொற்றினை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை சிலர் தொடர்ச்சியாக மீறுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இதனால் நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
 
இதேவேளை, முகக்கவசம் அணியாதவர்கள் இன்று முதல் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
முகக்கவசம் அணியாதவர்களைத் தேடி நாளை (29) முதல் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments