“கொரோனாவை விட தான் கொடியவன் என்றும் ஒரே இரவில் 2000-3000 இராணுவ வீரர்களை கொன்றதாக” அவர் வெளியிட்ட கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தக் கருத்துக்கு எதிராக பலர் கருணாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிவரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே கருணா அம்மான் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தான் கூறிய கருத்தில் எந்த மாற்றமுமில்லையென்றும் அதே கருத்தில் தொடர்ந்தும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியும் , ஜே.வி.பி கட்சியும் கூறியிருந்தாலும், அந்தக் கட்சிகளும் கடந்த காலங்களில் பிழைகள் செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Comments