சுகாதார பரிந்துரைகளை ஏற்று நடக்காதவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் ஆபத்து குறையும் வரை இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஆதரவு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மூன்று மாத காலங்களாக பின்பற்றிவந்த கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பராமரித்தல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த விதிமுறைகளுக்கு மாறாக செயல்படுவோர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Comments