Ticker

6/recent/ticker-posts

குருவிட்டவில் கைப்பற்றப்பட்ட 5000 ரூபாய் கள்ள நோட்டுகள்!


குருவிட்ட , தொடம்பே பகுதியில் 57 கள்ள நாணயத்தாள்களை வைத்திருந்த பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருவிட்l பொலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்  தலைமையகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து  21 கள்ள 5,000 ரூபாய் நோட்டுகளும் ,  500 ரூபாய் 34 கள்ள நோட்டுகளும்  மற்றும்  1000 ரூபாய் நோட்டுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரு கணினி, பல அச்சிடும் உபகரணங்கள் மற்றும் ஒரு காரையும் பொலீசார் சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments