Ticker

6/recent/ticker-posts

நாட்டின் பல பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்ட கந்தக்காடு கொரோனா பரவல் !


கந்தகாடு புனர்வாழ்வு மையத்தின்  கொரோனா பரவல் நேற்றைய  (14) நிலவரப்படி நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளதை அறியக் கூடியதாய் இரக்கிறது. 

கெகிராவா, ஹோமகம, அகுரெஸ்ஸ , இரத்னபுரி, தங்கல்லே, கண்டி, பம்பரதெனிய, ஹசலக, கம்பளை, ராஜாங்கன, கந்தளாய், ராகம மற்றும் மொரட்டுவை போன்ற பகுதிகளில் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய 661 பேர் நேற்று (14) சுய தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த மாதம் 7 ஆம் திகதி முதல்  516 பேர் வைரஸ் தொற்று நோயாளிகளாக  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோவிட் -19 வைரஸ் நோயிலிருந்து குணமடைந்து  1988 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியிருப்பதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட 658 பேர் எட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை பதிவாகியுள்ள தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2657 ஆகும்.

Post a Comment

0 Comments