Ticker

6/recent/ticker-posts

டென்னிஸ் பந்தின் மூலம் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் அனுப்பும் கும்பல் கைது!


களுத்துறையில் உள்ள மல்வத்த சிறைச்சாலை கைதிகளுக்கு  டென்னிஸ் பந்துகளை பாவித்து  ஹெரொயின், புகையிலை மற்றும் மொபைல் போன்களை வழங்கும் 15 பேர் கொண்ட   குழுவை வடக்கு களுத்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறைக்குள்  அனுப்பவிருந்த 12 கிராமும் 5 மில்லிகிராம் ஹெராயின், 19 புகையிலை மற்றும் 2 டென்னிஸ் பந்துகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர் 

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மல்j்தை  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகள் இந்த கும்பலின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும்  பொலிசார் தெரிவித்தனர்.

ஒரு டென்னிஸ் பந்தை  சிறைச்சாலை வளாகத்திற்குள் (எறிந்து)  அனுப்புவதற்கு  இந்த கும்பலுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படுவதாக தகவல்  கிடைத்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நாளை களுத்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

Post a Comment

0 Comments