தீவிரவாதிகளை பிடிக்காமல் சும்மா இருந்துவிட்டு அப்பாவி முஸ்லிம்களை சிறையில் அடைத்த அரசே ஐக்கிய தேசியக் கட்சி அரசு என பொதுஜன தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் குறிப்பிட்டார்.
களுத்துரையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
சஹ்ரான் தொடர்பில் 97 தடவைகள் புலனாய்வு பிரிவு அறிவித்தும் அவனை பிடிக்காமல் குர்ஆன் , அல்ஹசனாத் , யாசீன் , வெங்காயம் வெட்ட கத்தி வைத்திருந்த அப்பாவி முஸ்லிம்களை மாதக்கணக்கில் சிறையில் அடைத்த அரசாங்கமே ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம். நல்லாட்சி அரசில் ஜனாதிபதி ஒரு பக்கம் பிரதமர் ஒரு பக்கம் இருந்து கொண்டு நாட்டின் நிருவாகத்தை குழப்பி அடித்து முஸ்லிம்களுக்கு தீவிரவாதி பட்டத்தையும் பெற்றுக்கொடுத்து விட்டனர்.
இன்று எதிர்கட்சியில் அமர்ந்துகொண்டு முஜிபுர் ரஹ்மான் , அஸாத் சாலி , ஹக்கீம் , ரிஷாத் போன்றவர்கள் முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி பேசுகிறார்கள். இவர்களே அன்று 97 தடவைகள் சஹ்ரான் தொடர்பில் அறிவித்தும் அவனை பிடிக்காமல் வேடிக்கை பார்த்த அரசுக்கு முட்டு கொடுத்தவர்கள். இவர்களே குர்ஆன் , அல்ஹசனாத் , யாசீன் , வெங்காயம் வெட்ட கத்தி வைத்திருந்த அப்பாவி முஸ்லிம்களை மாதக்கணக்கில் சிறையில் அடைத்த அரசுக்கு முட்டுக்கொடுத்தவர்கள்.முஸ்லிம்கள் பற்றி பேச இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என முஸ்லிம்களின் உரிமை பற்றி பேச இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என பொதுஜன தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் குறிப்பிட்டார்.

0 Comments