கோவிட் -19 பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தடுப்புக் காவல் கைதி அந்த வைத்திய சாலையின் 8 வது மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
மேற்படி தடுப்புக் காவல் கைதி ஜூலை 12ம் திகதி நீர்க்கொழும்பு சிறைச்சாலையிருந்து வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின கண்காணிப்பில் இருந்துள்ளார்.
ஹெரோயின் சம்பந்தமான குற்றத்தின் பேரில் இவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேற்படி நபர் நேற்றிரவு காணாமல் போயிருந்ததாகத் தெரிய வந்ததோடு, அவர் கீழே விழுந்திருந்ததை வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுள்ளனர்.
இறந்துள்ளவர் நீர்கொழும்பு கதிரான வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபuாவார். அவருடைய பீசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று வௌிவர இருந்ததாக அறிய வருகிறது.

0 Comments