Ticker

6/recent/ticker-posts

வீடியோ விவகாரம்! மௌலவி முர்ஷித் ஜம்இய்யாவின் உதவிப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்  இரகசியமான முறையில் ஞானசார தேரரின் சாட்சியங்களை  வீடியோ செய்த குற்றச்சாட்டில் ஜம்இய்யதுல் உலமாவின உதவிப் பொதுச் செயலாளர்  மௌலவி முர்ஷித் முளப்பர்  சிக்கியிருப்பது முஸ்லிம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

இது தொடர்பாக மௌலவி முர்ஷித்  மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆணைக்கு உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம்களின் பொறுப்பு வாய்ந்த ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய முக்கியமான ஆணைக்குழு ஒன்றில் இவ்வாறு செயற்பட்டது கண்டிக்கத்தக்க செயலாகும்.  அதுமட்டுமல்லாமல் இந்நாட்டு முஸ்லிம்களை தலைகுனிய வைத்துள்ள மூன்றாம் தர செயலாகும்.  

இந்த நிகழ்வு தொடர்பாக  உலமா சபை   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

2020.09.09ம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது அதிருப்தியையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் நேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு ஜம்இய்யா சார்பில் ஆஜராகிய அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக்  எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் தொடர்பாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் தொடர்பில் உரிய தெளிவை அவரிடமிருந்து பெறுவதற்காக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவின் அவசரக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தலைமையகத்தில் நடைபெற்றது. மேற்படிக் கூட்டத்தில் ஜம்இய்யாவின் யாப்பின் பிரகாரம் குறித்த விடயத்தை விசாரித்தறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

 மௌலவி  எம்.எம்.எம். முர்ஷித் முளப்பர் விசாரணை முடியும் வரை ஜம்இய்யாவின் உதவிப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் நீங்கிக் கொள்வதாக எழுத்து மூலம் அறிவித்திருப்பதாக உலமா சபை அந்த அறிக்கையில்  ஒன்றின் குறிப்பிட்டுள்ளது .


Post a Comment

0 Comments