ஜனாதிபதி சிறிசேனவின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) தள்ளுபடி செய்துள்ளது.
ஜனாதிபதி சிறிசேனவின் மனநிலையை பரிசோதனை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து கடந்த மாதம் 10ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
ஜனாதிபதி சிறிசேனவின் மனநிலை ஆரோக்கியமான நிலையில் உள்ளதா என்பதை கண்டறிய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய தினம் குறித்த மனுவதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அத்துடன், மனுதாரர் வழக்கு செலவீனங்களுக்காக அரசாங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளரான தக்சிலா ஜயவர்தன சார்பாக சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

0 Comments