இலங்கையின் தற்போதைய நிலவரப்படி நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒரு நாளைய சாப்பாட்டு செலவிற்கு குறைந்தபட்சம் 2,500 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது என ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகள் தொடா்பான மருத்துவா்கள் சங்கம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது என அந்த சங்கத்தின் தலைவர் டொக்டா் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
குடும்பங்களின் உணவு குறித்து அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஆய்வு நடத்தப்பட்டதாகவும், இன்றைய நிலையில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு அவர்களின் அன்றாட உணவுக்கான செலவாக குறைந்தது 2,500 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

0 Comments