போதையில் துப்பாக்கி சூடு நடாத்திய ஜனாதிபதி ரணிலின் ராஜாங்க அமைச்சா் ஒருவா் பற்றிய செய்தியை அருண சிங்கள ஊடக இணையதளம் வெளியிட்டுள்ளது.
முப்பத்தேழு புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் சகோதரரான சன்ன விக்கிரமசிங்க இராப்போசன விருந்து விருந்தளித்துள்ளார்.
இந்த விருந்து வைபவத்தில் எதிா்வரும் நாட்களில் அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போகும் பாராளுமன்ற உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த வைபவத்தின் போது, அளவுக்கு அதிகமாக மது அருந்திய இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டுக் காட்ட ஆரம்பித்துள்ளார்.
மது போதையில் தான் ஹோட்டலில் இருப்பதை அவா் மறந்து விட்டாா் போலும், இராஜாங்க அமைச்சரின் துப்பாக்கிச் சூடு காரணமாக ஹோட்டலின் மேற்கூரையின் ஒரு சிறு பகுதி இடிந்து அமர்ந்திருந்த பேராசிரியர் ஒருவாின் தலையில் விழுந்துள்ளது.
உடனடியாகச் செயற்பட்ட ஜனாதிபதியின் சகோதரர், பேராசிரியரை மருத்துவ மனையில் அனுமதித்ததாக மேற்படி அருண சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Comments