Ticker

6/recent/ticker-posts

டொலா் கொண்டு வரும் புளி வாழைப்பழம்!


உலக வங்கியின் உதவியுடன், விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட ராஜாங்கனை புளி வாழை சாகுபடி திட்டத்தை  விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆகியோா் பாா்வையிட்டனா்.

சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு இந்த புளி வாழை செய்கை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், புளி வாழை செய்கை, அறுவடை செய்தல், பொதியிடல் போன்ற சகல செயற்பாடுகளையும் சர்வதேச தரத்திற்கமைய மேற்கொள்வதற்காக விவசாயிகளுக்கு விஞ்ஞான தொழில்நுட்பப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் வருடாந்தம் 152,264 கிலோ உயர்தர புளி வாழைப்பழங்களை உள்ளூர் சந்தைக்கு வழங்குகிறது.

மேலும், இந்த புளி வாழைப்பழங்கள் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு மெட்ரிக் டன் புளி வாழை அமெரிக்க டொலர் 600-700 என்ற விலையில் விற்கப்படுகிறது.

ராஜாங்கனையில் புளி வாழைப்பழங்களை பயிரிடும் விவசாயிகள் இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்து நாட்டுக்கு 28000 அமெரிக்க டொலர்களை ஈட்டித் தந்துள்ளதாக திட்டப்பணிப்பாளர் ரொஹான் விஜேகோன் தொிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments