கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி இலங்கை அதிகாரிகளுடன் இந்தியா முதல் சுற்று கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கு நீண்ட கால முதலீடுகள் மூலம் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக இந்தியா மேலும் கூறியுள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமொன்றுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

0 Comments