Ticker

6/recent/ticker-posts

பிஸ்கட் வகைகளின் விலையை குறைக்க பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானம்!


உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிஸ்கட் வகைகளின் விலையை 10-13% வரை குறைக்க இலங்கை பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்கம் (LCMA) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிஸ்கட் தயாாிப்புக்கு பயன்படம் இரண்டு முக்கிய மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், சந்தையில் பிஸ்கட்  வகைகளின் விலையை குறைக்க அனைத்து நிறுவனங்களும் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார தெரிவித்துள்ளார்.

பிஸ்கட் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சர்க்கரை  கிலோவுக்கு ரூ.40 குறைந்துள்ளதுடன், காய்கறி எண்ணெய் விலை கிலோவுக்கு சுமார் ரூ.250 குறைந்துள்ளது.

இந்த ஆண்டு (2022) மே மாதம் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு பின்னா்,  தின்பண்டங்களின் விலை 230% அதிகரித்துள்ளது.

இந்நாட்டில் அனைத்து மட்ட நுகர்வோர் மத்தியிலும் மிகவும் பிரபலமான சிற்றுண்டியாக விளங்கும் 80 கிராம் மாரி பிஸ்கட் பொதி சில மாதங்களுக்கு முன்னர் 30 ரூபாவாக இருந்த நிலையில் இன்று அதன் விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளது.

பிஸ்கட் உற்பத்தியாளர்கள் பொருட்களின் விலைகளை நியாயமற்ற முறையில் அதிகரித்திருந்தனா், இதன்காரணமாக நுகர்வோர் பிஸ்கட் வாங்குவதை வெகுவாகக் குறைத்ததால், உள்ளூர் பிஸ்கட் தயாாிப்பு தொழில் கடந்த காலங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதன்  காரணமாக  பிஸ்கட் வா்த்தகம் கடுமையாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில பிஸ்கட் நிறுவனங்களால் தாம் வாங்கிய வங்கி கடனை கூட கட்ட முடியாத அளவுக்கு விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.



Post a Comment

0 Comments