புகையிரதத்தில் மோதிய காரை, புகையிரதம் யாகொட ரயில் நிலையத்திற்குள் இழுத்துச் சென்றுள்ளது.
இதனால் கார், ரயிலுக்கும் யாகொட ரயில் நிலைய நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டது.
புகையிரதக் கடவை மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் ரயில் பாதையின் குறுக்கே செலுத்தப்பட்டதாக கணேமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்த கம்பஹா, மேல் யாகொட பகுதியைச் சேர்ந்த சுஜித் ஹர்ஷன என்ற 41 வயதுடைய வர்த்தகரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


0 Comments