ஜெனிவாவில் நடைபெற்று வரும் 51வது மனித உரிமைகள் அமர்வில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுா் றஹ்மான் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோா் நேற்றிரவு ஜெனீவா நோக்கி பயணமாகியுள்ளனா்.
எதிர்வரும் (11) மற்றும் (12) திகதிகளில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வில் இணைந்து கொள்ளும் நோக்கில் இவா்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஜெனீவா நோக்கி புறப்பட்டு சென்றனா்.
இவா்களுடன் சட்டத்தரணி எரந்த வெலியங்கே அவர்களும் உடன் சென்றிருப்பதாக என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளாா்.
இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையின் நிலைமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் இவ்வருட அறிக்கையில் நாட்டின் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவா், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று மூன்று வருடங்களுக்கு மேலாகியும் மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை எனவும் , இந்த வருட மனித உரிமைகள் அமர்வு இலங்கைக்கு மிக முக்கியமான அமர்வு என்றும் கூறியுள்ளார்.

0 Comments