கடந்த பல வருடங்களாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு சட்ட ரீதியான பங்களிப்பை வழங்கியமை, காலி முகத்திடல் போராட்டத்தின் போது செயற்பாட்டு ரீதியிலும் சட்ட ரீதியாகவும் முன்னின்று செயல்பட்டமைக்காக தோழர் நுவன் போபகே இற்கு ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் உரையாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அங்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மீது அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறை தொடர்பாகவும் மக்கள் போராட்டத்தின் மீது ஏவப்பட்டுள்ள ஜனநாயக விரோத அடக்குமுறை தொடர்பாகவும் சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக இன்று (10) தோழர் நுவான் போபகே ஜெனிவா நோக்கி பயணிக்கிறார்.

0 Comments