Ticker

6/recent/ticker-posts

அமைச்சா் “இருக்கிறது” என்கிறாா்! ஆனால் சந்தையில் “ இல்லை”!


மொத்த சந்தையில் போதிய அளவு கோதுமை மாவு இருப்பதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்தாலும் இன்னும் மூன்று வாரங்களில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா கோதுமை மாவின் ஏற்றுமதியை நிறுத்தியதால் இறக்குமதியாளர்களுக்கு கோதுமை  மாவின் இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மாவு பற்றாக்குறையால் சுமார் 300 பேக்கரிகள் தற்போது மூடப்பட்டுள்ளன. எனினும் தற்போது துருக்கி மற்றும் டுபாயில் இருந்து  மாவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அந்த நாடுகளில் இருந்து  மாவை ஏற்றி வரும் கப்பல்கள் இம்மாதம் 30ஆம் திகதியே இலங்கையை வந்தடையவிருக்கின்றன.

ஆனால் சந்தையில் போதுமான அளவு  மாவு இருப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இந்தியாவும் அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோகிராம் அரிசிக்கும் 20% வரியை விதிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்நாட்டு இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments