Ticker

6/recent/ticker-posts

கோட்டாவின் தீர்மானத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயா் நீதிமன்றம் முடிவு!


பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடா்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்த 03 அடிப்படை உரிமை மனுக்கள்  உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.  

எதிா்வரும் பெப்ரவரி மாதம் 07ம்  திகதி விசாரணைக்கான தினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரிதி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயா் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அனைத்து தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்த நீதிமன்றம், இந்த மனுக்கள் மீதான விசாரணையை பெப்ரவரி மாதம் 07ஆம் திகதிக்கு நிர்ணயித்துள்ளது.

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments