மத்தளை விமான நிலையத்திற்காக பெற்றக்கொள்ளப்பட்ட கடனை செலுத்த 140000 வருடங்கள் தேவைப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிட்டகோட்டேவில் அமைந்துள்ள சொலிஸ் ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையத்தின் வருமானம் 16000 ரூபாவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தள விமான நிலையத்தினை அமைப்பதற்காக 27000 மில்லியன் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மனித குலம் தோன்றி 143000 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும் அந்தளவு காலத்திற்கு இலங்கையர்களை கடன்காரர்களாக ராஜபக்ஸ அரசாங்கம் மாற்றியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப நலனை கருத்திற் கொண்டே மத்தள விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 Comments