தான் ஜனாதிபதி பொதுஅபேட்சகர் மைத்ரீபால சிரிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்ததையொட்டி நடைபெறவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னைய நாள் (டிசம்பர் 7) நாமல் ராஜபக்ச தம்மை தனது வீட்டிற்கு வந்து சந்தித்து பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாமென்று வேண்டிக்கொண்டதாக ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
அப்பொழுது ஹெரோயின் விபாபாரிகள் தொடர்பாக தாம் வினவிய வேளை அது பற்றி தமக்கு ஏதும் தெரியாது என நாமல் ராஜபக்ச பதிலளித்ததாக தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் மைத்ரீபால சிரிசேனவிற்கு ஆதரவாக நடாத்தப்பட்ட அக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது,
“ நான் எட்டாம் திகதி கட்சியை விட்டு போவதை அறிந்த நாமல் ராஜபக்ச என்னை வீட்டில் சந்தித்து,
“ நீங்க்ள வெளியேறிவிட்டாலும் நாம் இம்முறையும் வெற்றி பெறுவோம். அவ்வாறு வெற்றி பெற்றால் 09ம் திகதி துமிந்த சில்வா வெளியே வருவார்” என்றார்.
அதற்கு நான், “ வெளியே வரவேண்டிய அவசியம் இல்லை. இப்போது கூட வெளியே தானே அவர் இருக்கிறார்” என்றேன். அப்பொழுது எனது தாயார் நாமலிடம்,
“ உண்மையா மகன் துமிந்த சில்வா ஹெரோயின் விற்கும் விடயம்? ” என வினவினார்.
அதற்கு நாமல் , “ எனக்குத் தெரியாது ஆன்டி...சில வேளை அவரைச் சூழ இருப்பவர்கள் யாராவது அவருக்கே தெரியாமல் அவ்வாறான வேலைகளில் ஈடுபடுகின்றார்களாக இருக்கலாம்” என்று கூறினார்.
ஆகவே நாமல் ஒரு குழந்தை. முழு நாடும் அறிந்து வைத்துள்ளது யார் ஹெரோயின் வியாபரிகள் யார் என்பதை. ஆனால் ஜனாதிபதியின் மகனுக்கோ இந்நாட்டில் யார் போதைப் பொருள் வர்த்தகர்கள் என்பது தெரியாது. போய்ப் பாருங்கள் கொலன்னாவைக்கு...ஹொயினுக்கு அடிமையாக நம் இளைஞர்கள் தெருவழியே விழுந்து கிடக்கின்றார்கள்.”

0 Comments