முஸ்லிம் காங்கிரஸின் முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து இன்று இரவு அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இடம்பெறவிருப்பதாக அறிய வருகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் வழமையான தோ்தல் கால கோாிக்கையான கரையோர மாவட்ட கோாிக்கை மீண்டும் முன்வைக்கப்பட இருப்பதாகவும், அரசாங்கம் வழமைபோல் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் சந்தா்ப்பத்தில் மு.கா மீண்டும் மஹிந்தவிற்கு ஆதரவு அளிக்க முன்வரலாம் என்றும் அறிய வருகிறது.
றிஷாத் பதியுதீனின் எதிா்த்தரப்பிற்கான ஆதரவைத் தொடா்ந்து முஸ்லிம் காங்கிரஸின் மவுசு குறைந்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.
தோ்தல் மிக அண்மித்து வந்த நிலையில் மு.கா. யாருக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை எடுக்க முடியாத அளவில் சங்கடமான நிலையில், அரசியல் நெருக்கடியில் தவித்துக் கொண்டிருந்தது. இப்போது ஆளும்தரப்பில் றிஷாத் பதியுதீன் விட்ட இடைவெளியை நிரப்ப மு.கா. வை மஹிந்த தரப்பு நிா்ப்பந்தித்து வருவதாக அறிய வருகிறது.
0 Comments