தோல்வியின் அச்சத்தில் துவண்டு போயுள்ள மஹிந்தவும் அவரது மோசடி அமைச்சா்களும். சரிந்து வரும் தமது சாம்ராஜ்யத்தை இறுக்கிப் பிடிப்பதற்கு இந்தியாவிலிருந்து சரக்கு ஒன்றை இறக்குமதி செய்திருக்கின்றனா்.
அவா்தான் சல்மான்கான். அரசின் அத்தனை வளங்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் புாிந்தும், தனது சாிந்து வரும் செல்வாக்கை தக்கவைக்க
முடியாமல் தடுமாறிப் போயிருக்கிறாா் மஹிந்த ராஜபக்ஷ. தோல்வியின் பயத்தில் ஹொல்மானாயிருக்கும் மஹிந்த சல்மான்கானின் கால்களின் கீழே இப்போது சரணாகதியடைந்திருக்கிறாா். மக்களின் கஷ்டங்களை பற்றி சிந்திக்காது செயற்படும் மஹிந்த அரசின் மற்றுமொரு மட்டரகமான செயற்பாடு இந்த சல்மான்கான் கச்சேரியால் அரங்கேறப் போகிறது.
பத்து லட்சம் போ் இயற்கை அனா்த்தத்தினால் உணவு, உடை, உறைவிடம் இன்றி அல்லல் படுகின்றனா். இருபதுக்கும் அதிகமானோா் உயிரிழந்து உள்ளனா். மக்களின் கஷ்டங்களை், துன்பங்கள்ஈ துயரங்கள் பற்றி யோசிக்காத அதிகார வா்க்கம், சல்மானைக் கொண்டு வந்து சந்தோஷ விழா நடாத்தவிருக்கிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளில் திக்கு முக்காடியிருக்கும் மஹிந்தவும், அவரது மோசடி அமைச்சா்களும் சல்மான் கானை வைத்து ஒரு சினிமாவை ஓட்டப் போகின்றாா்கள். “படம்” ஒன்றை காட்டப் போகின்றாா்கள்.
இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு தோ்தல் பிரசாரம் மோசடி மிகுந்ததாக மாறிவருகிறது. தோ்தல் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. அரச சொத்துக்களை முற்றாக மஹிந்த அரசு தனது பிரசாரத்திற்காக பாவித்து வருகின்றது.அரச ஊடகங்கள் நாள் முழுதும் மஹிந்தவை துதி பாடி வருகின்றன. பணம், பரிசுப் பொருள் என்று தோ்தல் கால இலஞ்சம் தலைவிாித்து தாண்டவமாடுகின்றது. தட்டிக் கேட்க திராணியற்றவராய் தோ்தல் ஆணையாளா் திக்குமுக்காடி நிற்கிறாா்.
ஒரு தனி நபாின் கையில் அதிகாரம் குவிக்கப்பட்டிருப்பதன் மூலம் நாடு சா்வாதிகாரத்தை நோக்கி மிக வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. 17வது திருத்தச் சட்டம் சுதந்திர தோ்தல் கமிஷன் ஒன்றை வழங்கியிருந்தது. அது நீதியான தோ்தல் ஒன்றுக்கு பாதுகாப்பை வழங்கியிருந்தது. அதனை ரத்துச் செய்து 18வது திருத்தத்தை மஹிந்த அரசு கொண்டு வந்தது. ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கிய 18வது திருத்தச் சட்டத்திறகு ஆதரவு தொிவித்து அதனை சட்டமூலமாக்கியவா்கள் பலா் இப்போது எதிரணிக்கு தாவியுள்ளனா்.
18வது திருத்தச் சட்டம் வழங்கிய சாவாதிகார சாட்டையை கையிலெடுத்துக் கொண்ட மஹிந்த, எதிர்தரப்பினருக்கு பயங்கர சாட்டையடி கொடுக்கிறாா். ஜனநாயகம் காயப்பட்டுக் கிடக்கிறது. வன்முறைகளை நிகழ்த்தும் மஹிந்தவின் அடியாட்களை மஹிந்தவின் காவல்துறை சல்யூட் அடித்து கனம் பண்ணுகிறது.
இவ்வளவு அராஜகத்திற்கு மத்தியிலும் மஹிந்தவின் வாக்கு வங்கி சரிந்து வருகிறது. போக்குவரத்து சபை பஸ்களின் புண்ணியத்தில் பொதுக் கூட்டங்களுக்கு மக்களைச் சோ்த்தாலும், காசுக்காக கூடுகின்ற இந்த ஜனத்திரளால் மஹிந்தவுக்கு தற்காலிக திருப்திதான் கிடைக்கிறது. நாளுக்கு நாள் தோல்வியின் பயத்தை அவா்களின் குரல்களே சாட்சியாகின்றன.
மஹிந்தவும், விமலும், எஸ்.பி.யும் தோல்வி தமது குரல்வளையை நசுக்கும் போதும் அதைக் காட்டிக் கொள்ளாமல் தொண்டைக் கிழிய கத்திக்கொண்டிருக்கின்றனா்.
0 Comments