Ticker

6/recent/ticker-posts

இன்று தபால்மூல வாக்கெடுப்பு -நாளை காத்திருக்கும் ஜனாதிபதியின் வெகுமதி

உபபொலிஸ்மா அதிபர் காமினி நவரத்னவின் கையொப்பத்துடன் அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் நேற்று (22) அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் பிரகாரம், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவிருப்பதால் அதற்கான ஆரம்பக்கட்டணமான 50,000 ருபாய்களை தயார்செய்து கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.


இன்று (23) முதல் 26ம திகதி வரை   தபால் மூல வாக்கொடுப்புகள் நடைபெறும் நிலையில் அவசர அவசரமாக மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும் இத்திட்டமானது பொலிஸ் சேவையில் ஈடுபடும் 84,000 உத்தியோகத்தர்களது கவனத்தை ஈர்க்கும் விடயமாக உள்ளது. 

பொலிஸ் மற்றும் அரச ஊழியர்களுக்கு 50, 000 ரூபாய்க்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தபால் மூல வாக்ககெடுப்புக்கு முந்தைய தினம் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

முப்படையினருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது தொடர்பாக வரவு-செலவு திட்டத்தில்  எந்தவொரு திட்டமும் இல்லாத நிலையில் பாதுகாப்பு பிரிவினருக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்க 21ம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments