கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவின்
மறு உருவமே இம்முறை பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன என
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதிவேக வீதி அமைப்பின் போது அரசாங்கம் நிதி மோசடி செய்ததாக எதிர்கட்சி
குற்றம் சுமத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன்
நிரூபிக்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிதி மோசடி செய்ய வேண்டுமாயின் அவர்
யுத்தத்தின் போது மோசடி செய்திருப்பார் என்றும் ஆனால் அவர் அப்படி செய்யாது
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க,
உலகில் முன்னேற்றமடைந்த நாடுகள் வரிசையில் இலங்கை இருப்பதாகவும் அது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.

0 Comments