காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும்
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறுபோக பிரதி அமைச்சருமான
நிசாந்த முத்துஹெட்டிகம தோ்தல் வன்முறை குற்றச்சாட்டிலும், அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டிலும் சிக்கியுள்ளாா். இவரை கைது செய்ய முயற்சி செய்வதாகவும், தற்போது இவா் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்
ரோஹன தெரிவித்திருந்தார்.
வந்துரம்ப பிரதேசத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் மேடையை சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பிரதி அமைச்சரின் மூன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பலவந்தமாக பொலிஸ் நிலையத்திலிருந்து தனது சொந்த வாகனத்தில் அழைத்துச் சென்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வந்துரம்ப பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பிரதி அமைச்சருக்கு எதிராக தனித்தனியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசாரணை நடத்தி வாக்கு மூலமொன்றை பிரதி அமைச்சரிடம் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், அவர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார்.
அதே தினம் இரவு 11.45 அளவில் உடுகம பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்களை பாடியுள்ளார்.
பிரபல பாடகர் தீபால் சில்வாவுடன் இணைந்து ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
பொலிஸ் பாதுகாப்புடன் முத்துஹெட்டிகம இசை மேடைக்குச் சென்றதாகவும், காலி மற்றும் உடுகம பொலிஸார் பலர் இசை நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தலைமறைவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்ட பிரதி அமைச்சரை எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments