இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித
உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித
உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீண்டும்
வலியுறுத்தியுள்ளார்.
மோதல்களின் பின்னரான
பிரச்சினைகளுக்கு முழுமையாகத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் சர்வதேச
சமூகத்துடன் இணைந்து ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட வேண்டும்
என்பதே ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என
அவரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்
பேரவையில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்தநிலையில்
குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பான் கீ மூன்
மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எந்தவிதமான சர்வதேச விசாரணைகளுக்கும் ஒருபோதும்
அனுமதியளிக்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பதிலளித்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments