முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய், இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இந்து
மகா சபா நிறுனருமான மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை
மத்திய அரசு அறிவித்துள்ளது. இருவரின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படும்
நிலை யில், அவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல
துறைகளில் சிறந்த சேவையாற்றிய பிரமுகர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய
அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது ‘பாரத ரத்னா’. இந்த விருது கடந்த
1954ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த விருது கலை, இலக்கியம்,
அறிவியல் மற்றும் பொதுச் சேவையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு
வழங்கப்பட்டது.
பின்பு இந்த விதிமுறை தளர்த்தப்பட்டு எந்த துறையாக
இருந்தாலும் மிகச் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு ‘பாரத ரத்னா’ வழங்கலாம்
என இந்திய அரசு முடிவு செய்தது. பிரதமர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு ஜனாதிபதி
இந்த விருதை வழங்குகிறார். ஆண்டுக்கு அதிகபட்சமாக 3 பேருக்கு இந்த விருதை
பரிந்துரை செய்யலாம். பாரத ரத்னா விருது பெறுபவர்களுக்கு அரசின் சான்றிதழ்,
இலை வடிவிலான ஜனாதிபதியின் பட்டய பதக்கம் ஆகியவை வழங்கப்படும். இந்த
விருது பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுவதில்லை.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பாரத ரத்னா விருதை வழங்க வேண்டுமென்று பா.ஜ.க மூத்த தலைவா்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி வேண்டுகோள் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 Comments