
டெஸ்ட் போட்டிகளில் 12000 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை வீரர் குமார் சங்கக்கார குறைந்த போட்டிகளில் 12000 டெஸ்ட் ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குமார் சங்கக்கார 5 ஓட்டங்களை பெற்றதும் அவர் தனது 12000 ஆவது டெஸ்ட் ஓட்டத்தை பெற்றார்.
இவர் இதுவரை 130 டெஸ்ட் போட்டிகளில் (224 இன்னிங்ஸ்) விளையாடி 12028 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 37 சதங்களும் 51 அரைச் சதங்களும் அடங்குகின்றது. இவரது ஓட்ட சராசரி 58.38 ஆக உள்ளது.
12000 ஓட்டங்களை பெற்ற வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டென்டுல்கர் (15,921) இருக்கின்றார். அடுத்த படியாக ரிக்கி பொன்டிங் (13,378), ஜக் கலிஸ் (13,289) மற்றும் ராகுல் ட்ராவிட் (13,288) ஆகியோர் இருக்கின்றனர்.
 
 
 
 
 
 
 
.jpg) 
.jpg) 
.jpg) 
 
 
 
 
 
 
 
0 Comments