புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தின் சிவில் உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து இன்று பிற்பகல் புத்தளம் நகரில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருக்கும் போது  குண்டர்கள் குழுவொன்றினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை சுமார் 4:30 மணியளவிலும் இவ்வமைப்பினர் இதே குழுவினால் தாக்குதலுக்குள்ளாகியிருந்தனர்.
நேற்று தேர்தல் வாக்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பில் பத்தாயிரம் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து வீடு வீடாக விநியோகம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.  இதன்போது புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸின் ஆதரவாளர்கள் சுமார் 60 பேர் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்துகொண்டிருந்த புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணவு மன்றத்தின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் புத்தள கள நிலவரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று தாக்குதல் நடாத்திய அதே குழுவினர் தான் மீண்டும் இன்றும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.   

 
 
 
 
 
 
 
.jpg) 
.jpg) 
.jpg) 
 
 
 
 
 
 
0 Comments