ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மேலும் மூன்று பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் இருவர் ஆண்கள் என்றும், மற்றொருவர் பெண் எனவும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 90 பேரில், 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பன்றிக்காய்ச்சல் பாதிப்பு மற்றும் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அந்த இருமாநில அரசுகளும் அறிவித்திருக்கின்றன. பன்றிக்காய்ச்சல் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னை வந்த, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், பன்றிக் காய்ச்சல் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக கூறினார்.

0 Comments