‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தூய்மை பணியில் ஈடுபட சில பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த பிரபலங்களும் தூய்மை பணியில் ஈடுபட்டதுடன், பிற பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
அதே பாணியில், ஆம் ஆத்மி தலைவர்
அரவிந்த் கெஜ்ரிவால், தனது கட்சிக்கு நிதி திரட்டும் இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார். இதற்கு ‘நான் நேர்மையான கட்சிக்கு நிதி உதவி செய்கிறேன்’ சவால் இயக்கம் என்று பெயர். தானே ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து இயக்கத்தை தொடங்கிய கெஜ்ரிவால், நன்கொடை அளிக்குமாறு தனது சகோதரர், சகோதரி, நடிகை குல் பனாக் உள்பட 11 பிரபலங்களுக்கு சவால் விடுத்தார்.
இவர்கள், வேறு 10 பிரபலங்களுக்கு சவால் விடுவார்கள். 10 ரூபாய் கூட நன்கொடை அளிக்கலாம் என்று கெஜ்ரிவால் கூறினார். டெல்லி சட்டசபை தேர்தலுக்கு ரூ.30 கோடி நன்கொடை திரட்ட அவர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

0 Comments