Ticker

6/recent/ticker-posts

சுதந்திர தினத்தை முன்னிட்டு எரிபொருள் விலை குறைக்கப்படும்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு எரிபொருள் விலை குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். 

இதேவேளை, விரைவில் மின்சாரம், எரிபொருள், கேஸ் போன்றவற்றிற்கு முறையான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊழியர்களை இன்று சந்தித்த போதே இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மற்றும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இதனை தெரிவித்தனர். 

ஊழல் நிதி மோசடி போன்றவற்றிக்கு இனி முடிவு கட்டப்படும் என்றும் ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

இதேவேளை, இத்துறை தனக்கு புதிது என்றாலும் துறைசார் அனுமபவம் வாய்ந்த அமைச்சர் சம்பிக்கவுடன் இணைந்து செயற்படக் கிடைத்தமை பாக்கியம் என்றும் நல்லாட்சியை நிலைநாட்டவும் 100 வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments