முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.
முதலில் தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட மஹிந்த பின்னர் மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சுமங்கல தேரையும் பின்னர் அஸ்கிரி பீடாதிபதி உடுகம புத்தரக்கித தேரரையும் சந்தித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கண்டி விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திலும் அமுனுகம மற்றும் லொஹான் ரத்வத்தே ஆகியோரும், கண்டி நகர சபை முதல்வர் மஹேன் ரத்வத்தேயும் இணைந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதியுடன் இணைந்து நாடு முழுவதும் சஞ்சரித்த முக்கிய தலைவர்கள் இன்று முன்னாள் ஜனாதிபதியின் கண்டி விஜயத்தில் இணைந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகளுடன் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 Comments