கடந்த அரசில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் நீதியமைச்சராக இருந்தகாலத்தில் சட்டக் கல்லூரியில் வினாத்தாள்கள் ஆங்கில மொழியில் மாத்திரமே உருவாக்கப்படும் என மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நிராகரித்துள்ள நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, இனிவரும் காலங்களில் வினாத்தாள்கள் மும்மொழியிலும் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்துள்ளார்.
தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் மாத்திரமே கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பரீட்சை எழுத முடியாது என கடந்த வருடம் மாணவர்கள் போராட்டம் ஒன்றும் நிகழ்ந்திருந்திருந்தது. இந்நிலையிலேயே இன்று சட்டக்கல்லூரிக்கு விஜயம் செய்து மாணவர்களைச் சந்தித்த அமைச்சர் அங்கு இவ்வாக்குறுதியை வழங்கியதோடு உடனடியாக உத்தரவையும் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments