இந்த பகுதியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கடந்த 10 வருடங்களாக எம்மோடு இருந்து எல்லாவற்றையும் பெற்று விட்டு மக்களுக்கு கொடுக்காமல் மறுபக்கம் சென்றுவிட்டார்.அவர் ஒரு முனாபியாக தற்போது மாறிவிட்டார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்
மன்னார் கிளை ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக்கூட்டம் நேற்று(2) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
மன்னார் கிளை ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக்கூட்டம் நேற்று(2) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மக்கள் மத்தியில் மேலும் உரையாற்றுகையில்,,,,,,
நாங்கள் ஒரு தகுதிக்கு ஏற்றவகையில் அமைச்சரை நியமித்தால் அவர் முழு நாட்டிற்கும் பொறுப்பான அமைச்சராக இருக்க வேண்டும்.
அவர் இனத்திற்கோ,குலத்திற்கோ,மதத்திற்கோ அல்ல.அரசாங்கத்தைச் சேர்ந்த எந்த அமைச்சராக இருந்தாலும் அவர் இந்துக்கள்,கத்தோலிக்கர்கள்,முஸ்லீம்கள்,பௌத்தர்கள் என பார்க்காது எல்லோரையும் ஒருமித்து பார்க்க வேண்டும்.அது தான் அவரது கடமை.இனவாதத்தை தூண்டிவிட்டு,மதவாதத்தை தூண்டிவிட்டு சேவை செய்ய முடியாது.
எங்களுக்குத்தெரியும் மதப்பிரச்சினை காரணமாக கஸ்டப்பட்ட நாடுகள் தொடர்பில்.பாக்கிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,ஈராக்,சிரியா உற்பட பல நாடுகள் மதத்தின் காரணமாக கஸ்டப்படுகின்றது.
எங்களுக்கு தெரியும் கடந்த 5 வருடங்களுக்கு முன் இந்த பகுதி எப்படி இருந்தார்கள் என்றும்,தற்போது எப்படி இருக்கின்றது என்றும் எங்களுக்கு தெரியும்.தற்போது இந்த பகுதி மக்கள் எந்த பிரச்சினைகளும் இன்றி சந்தோசமாக சந்தேகம் இன்றி வாழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இருள் சூழ்ந்த,முகாம்களில் வாழ்ந்த அந்த காலங்களை பலர் மறந்து விட்டார்கள்.எனவே எல்லோரும் ஒன்றுபட்டு,கைகோர்த்து,நாங்கள் சகோதரர்களாக ஒரு நாடாக முன்னே செல்லும் காலம் வந்து விட்டது.
உங்களுக்குத் தெரியும் இந்த பகுதி அபிவிருத்தி இல்லாத நிலை காணப்பட்டாலும் ஒரு சிலர் தான் அபிவிருத்தி அடைந்து கொண்டனர்.இந்த நாட்டு மக்களுக்கு காணி இல்லாது போனாலும் ஒரு சிலர் 400 அல்லது 500 ஏக்கர் காணிகளை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
அவர்கள் இவ்வாறு தொடர்ந்து செய்ய முற்பட்ட போது நாங்கள் அதற்கு முடியாது என தெரிவித்த சந்தர்ப்பத்தில் அவர்கள் எங்களுடன் கோபப்பட்டார்கள்.
எனவே நீங்கள் அவரை பார்த்து கேட்க வேண்டும் இந்தப்பகுதி மக்கள் மிகவும் ஏழைகளாக மாறும் போது அவர்கள் மாத்திரம் எவ்வாறு கோடிஸ்வரர்களாக மாறினார்கள் என்று கேட்க வேண்டும்.இந்த சந்தர்ப்பத்தில் நான் முக்கியமானதொன்றை கூற விரும்புகின்றேன்.முக்கியமாக முஸ்லீம் மக்களை பார்த்து கேட்கின்றேன் உங்களுடைய பெறுமதியான வாக்குகளையும் எந்தவொரு முதலாளிக்கும் ஏலத்தில் விடுவதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டாம் என்று உங்களைப் பார்த்து கேட்டுக்கொள்ளுகின்றேன்.
அந்த இருள் சூழ்ந்த காலம் முடிந்து விட்டது.நாங்கள் இனி முன்னோக்கி செல்ல வேண்டும் .நாங்கள் பட்ட கஸ்டம் போதும்,முகாமில் இருந்த கஸ்டம் போதும்.உங்களுக்கென்று வீடுகள் இருக்க வேண்டும்.அந்த நிலைமையை ஏற்படுத்திக்கொண்டு இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லா இன மக்களும் கை கோர்த்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
மீனவ மக்களுக்கும்,விவசாய மக்களுக்கும் சில சில பிரச்சினைகள் இருக்கலாம்.அவற்றை நாங்கள் வெகு விரைவில் தீர்த்து வைப்போம்.
எந்த இனத்தையும் இன்னொரு இனம் அடிமையாக்க முடியாது.இது எமது தாய் நாடு நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் அந்த வகையிலே நாம் எல்லோரும் வாழவேண்டும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
எதிர்க்கட்சியினை சார்ந்தவர்கள் இலவசக்கல்வியை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர்.பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அங்கு பணம் அறிவிட்டு கல்வியை போதிப்பதற்கான நடவடிக்கைகளை .
பல்கலைக்கழகங்களில்,தொழில் நுட்பக்கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்றால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற நிலமை அவர்களுடை தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளனர்.அதற்கு நாங்கள் ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம்.இலவசக்கல்வியை நாங்கள் தொடர்ந்தும் காப்பாற்றுவோம்.அதனால் நீங்கள் எல்லோரும் எங்களுடன் கை கோர்த்துக்கொள்ளுங்கள்.என தெரிவித்தார்.
0 Comments