மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தால் சந்திரிகா குமாரதுங்க பிரதமர் பதவியை பெறுவதற்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக மேல் மாகாண முன்னாள் அமைச்சர் மற்றும் தூய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்;
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியை வகிக்கவே முயற்சிக்கின்றார். மேலும் ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படுமா? இல்லையா என்பதற்கும் மைத்திரிபால பதிலளிக்கவேண்டும்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியை வகிக்கவே முயற்சிக்கின்றார். மேலும் ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படுமா? இல்லையா என்பதற்கும் மைத்திரிபால பதிலளிக்கவேண்டும்.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரபாகரனை ”மிஸ்டர் பிரபாகரன்” என்று கூறியுள்ளார். இதன்மூலம் உலகின் மிலேச்ச பயங்கரவாத தலைவனை கௌரவித்துள்ளார். பிரபாகரன் தனது இனத்தையே அழித்தவர். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தால் சந்திரிகா குமாரதுங்க பிரதமர் பதவியை பெறுவதற்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிகின்றது. இந்த நாட்டை சமஷ்டி முறைக்கு கொண்டு செல்ல முயற்சித்தவர் சந்திரிகாதான்.
2000 ஆம் ஆண்டு தீர்வுப் பொதி மூலம் அதனை கொண்டுவர முயற்சித்தார். ஆனால் அதிஷ்டவசமாக அது நிறைவேறவில்லை. தற்போது ஈழக் கனவை நனவாக்க சந்திரிகா முயற்சிக்கின்றார் என தெரிவித்தார்.

0 Comments